Friday, May 13, 2022

அரசனின் வருகை

 #அரசனின் வருகை...


நீண்ட பிரளயத்தின் வாசலில்

ஒரு மொட்டின் ஜனனம்

நம்பிக்கை விழிகள்

கடுப்படைந்து.....


சோலைக்குயில்களெல்லாம் - இனி

அடை காத்திடும்!!

ஆரோகணம் அவரோகணமிசைத்திடா

அடைந்து கூட்டில் குலவிடா....


நடுச்சாமத்தில் நாய்களின் ஊழையும்

பூட்ஸ் காலடிகளின் டப் டப் ஒலியும்

கோழிக்கூடு வரை தொடரும்

குழம்பின் வாசனையும் ....


மீண்டும் .....

மெல்ல ஒலிக்கும் வீவீசியும், ஐவீசியும்

ஆற்றுப்படுக்கைகளில் ஆக்காண்டியின்அலறலும் 

கண்ணாக் காடெங்கும் நரிகளின் ஊளையும்

இரவின் முகவரியாயினியோ?


வீதியோரத்து அரண்களில் பற்றியெரியும் சிகரட் 

காற்றில் கலந்து போதிதர்மனின்

சீடர்களைச் சீண்டி விட

சிருங்காரமிசைத்து மீண்டும் 

முருங்கையேறும் வேதாளங்கள்..


மூங்கில் குளாய்களின்

அதிகார ஓசை தொடருமோவினியெனும்

ஏக்கத்தினிடையே

சாக்கடையாய் போன

அதிகாரிகளின் சாணக்கியம்

ஏழைகளின் வயிற்றிலே

எட்டியுதைத்திடுமோவெனும் ஏக்கம்

எட்டிப்பார்க்கிறது.....


புதிய நம்பிக்கையில் 

ஓர் அரசனின் வருகை........

மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல் முறைகள்.

அறிமுகம் மட்டக்களப்பு (Batticaloa) — இலங்கையின் கிழக்குக் கடற்கரை மண்டலத்தில் அமைந்த ஒரு முக்கிய பிராந்தியம். இது அதன் லாகூன் (ஆறு) (lagoon...